districts

ஜேஎன்யு மாணவர் சங்க அலுவலகத்தைக் காலி செய்திட நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துசெய்திடுக! சிபிஎம் அறிக்கை

புதுதில்லி, அக்.17- ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம், ஜேஎன்யு மாணவர் சங்க அலுவலகத்தைக் காலி செய்திட வேண்டும் என்று அம்மாணவர் அமை ப்புக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது. இதனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம், ஜேஎன்யு மாணவர் பேரவை அலுவலகத்தைக் காலி செய்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இது மாணவர் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைப்பை நசுக்குவதற்காக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட் டுள்ள சமீபத்திய அப்பட்டமான இழி முயற்சியாகும். பல்கலைக்கழக நிர்வாகம் 2018-19இலும்கூட, மாணவர் பேரவை யை அதிகாரப்பூர்வமாக அறிவித்திட மறுத்திருந்தது. இந்த ஆண்டு ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் மிகவும் பெரும்பான்மையான மாண வர்களைக் கொண்டு நடத்தப்பட்டது என்று கூறி தேர்தலை நீதிமன்றம் சட்டப்பூர்வமானது என்று கூறியுள்ள போதிலும் நிர்வாகம் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறது. பல்க லைக் கழக வளாகத்திற்குள் ஜன நாயக நடவடிக்கைகள் அனைத்தை யும் முடக்கவேண்டும் என்கிற முயற்சி களின் ஒரு பகுதியாக இதனை நிர்வா கம் செய்திருக்கிறது. தங்களின் உரி மைகளுக்காகப் போராடும் மாண வர்களும், ஆசிரியர்களும் நிர்வா கத்தால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கம், மத்திய அர சின் கீழான அனைத்துக் கல்வி நிறு வனங்கள்மீதும் அடக்குமுறையை ஏவிட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கல்வி நிலை யங்கள் மீதான சுதந்திரம் மற்றும் ஜன நாயக உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஜேஎன்யு மாணவர் பேரவை அலு வலகத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிற நிர்வாகத்தின் கட்டளைத் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. பல்கலைக்கழகம் புதிய மாணவர் சங்கத்தை அதிகாரப் பூர்வமான முறையில் அறிவித்திட வேண்டும் என்றும் அதன் செயல்பாடு களில் குந்தகத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.)