கடலூர், மார்ச் 31- தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணி குறித்து பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளது. இன்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலர் ஜெக தீஸ்வரன் முன்னிலையில் அனைத்துக் கட்சியினர் முன்னி லையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதி வேற்றம் நடைபெற்றது. இந்த சின்னம் பதிவேற்ற த்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 341 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது கடலூர் சட்டமன்ற தொகுதிகள் அதிமுக சார்பில் சம்பத், திமுக சார்பில் ஐயப்பன், தேமுதிக சார்பில் ஞானபண்டிதன், நாம் தமிழர் கட்சி சார்பில் கடல் திலிபன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள டக்கியது 9 சட்டமன்ற தொகுதியிலும் 3001 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதியில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் வட்டாட்சியர் அலுவல கத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது