திருப்போரூர், மார்.05- நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது போல் சித்தா பல்கலைக்கழகம் துவக்கத் திற்கான கோப்புகளையும் ஆளுநர் அலுவலகம் கிடப்பில் போட்டுள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மருந்து கழகத்தின் கீழ் செயல் பட்டுவரும் இந்திய மருத்துவ முறை மருந்துகளுக்கான சித்தா, ஆயுர் வேத மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் டாம்கால் தொழிற் சாலை 1983ம் ஆண்டு முதல் செயல் பட்டுவருகின்றது. இத் தொழிற் சாலையில் இந்திய மருத்துவ முறை யிலான 174 மருந்துகள் தாயர் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் முறை மருத்துவமான சித்த மருத்துவ மருந்துகளை மக்களிடம் பிரபல படுத்தும் வகையில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் மற்றும கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகளில் டாம்கால் நிறுவன மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தினை சனியன்று (மார்ச் 5) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பரமணியன், சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கிவைத்தனர்,. மேலும் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை உயர்திடும் வகை யில் ரூபாய் 63.44 லட்சம் மதிப்பீட்டில் 110 கிலோவாட் சூரிய ஆற்றல் உற்பத்தி மையத்தினையும் துவக்கி வைத்தனர்.
மேலும் அழிந்துவரும் மூலிகை தாவரங்களை பாது காக்கும் வகையில் கேவை தமிழ்நாடு வேளாண் கல்கலைகழகத்து டன், தமிழ்நாடு மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பாக அமைச் சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ம.சுப்பரமணியன் செய்தியாளர்க ளிடம் பேசுகையில் 1983ம் ஆண்டு முதல் டாம்கால் நிறுவனம் 5.90 ஏக்கர் நிலத்தில் ஆலத்தூரில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. இத் தொழிற்சாலையில் 174 வகையான இந்திய மருத்துவ முறை மருந்து கள் சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இதன் தலைமை அலுவலகம் அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவமனை வளாகம் அரும்பாக்கத்தில் செயல் பட்டுவருகின்றது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு சித்தா பல்கலைகழகம் அமைத்திட சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏனே? ஆளுநர் அலுவலகத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போடப்பட்டுள்ளது போல சித்தா கல்கலைகழகத்தின் கோப்பு களையும் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது அழிந்துவரும் மருத்துவ தாவரங்களை பாது காக்கும வகையில் கோவையில் செயல்பட்டுவரும் அழிந்துவரும் மூலிகை தாவரங்களை பாதுகாக்கும் வகையில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்துடன், தமிழ்நாடு மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பாக புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில மூலிகை தாவரங்கள் பாது காக்கப்படும் என தெரிவித்தார் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியாபதி துறை இயக்குநர் க.கனேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, அரவிந்தரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.