districts

img

போதைப்பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் : ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம், ஆக. 7- போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருட்க ளுக்கு எதிரான தடுப்பு நட வடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் மோகன், போதைப்பொருள் பழக் கத்தினால் ஏற்படும் தீமை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு வதுடன் போதைப்பொருட் கள் வெளியிலிருந்து கொண்டு வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை மூலம் பல்வேறு இடங்க ளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு, சந்தேகப் படும்படியான நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதுபோன்ற செயல் களை முற்றிலும் தடுக்க பொதுமக்களும் உறு துணையாக இருக்க வேண்டும். தவறுகள் நடப்பது தெரிந்தால் உடனடி யாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.