காலமானார்
திருத்தணி, மே 8- திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம்.எஸ்.விநாயாகத்தின் துணைவியார் பாரதி சனிக்கிழமையன்று காலமானார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு திருவள்ளூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால் மாற்றும் தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று இரவு புறப்படும் புறநகர் பேருந்துகள்
சென்னை, மே 8- கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்க ளுக்கு மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் , மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு கடைசியாக புறப்படும் பேருந்துகள் கீழ்கண்டவாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - மார்த்தண்டம் மாலை 6 மணி, சென்னை - நாகர்கோவில் மாலை 7 மணி, சென்னை - தூத்துக்குடி இரவு 7 மணி, சென்னை - செங்கோட்டை இரவு 7.30 மணி, சென்னை - திருநெல்வேலி இரவு 8 மணி, சென்னை - திண்டுக்கல் இரவு 8 மணி, சென்னை - மதுரை இரவு 11.30 மணி, சென்னை - திருச்சி இரவு 11.45 மணி. சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதி யான wwwtnstcin மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம் நகரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 8 குழுக்கள்
விழுப்புரம்.மே 8- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் வரை ஒன்று இரண்டு நபர்கள் மட்டுமே கொரானா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர், இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு கொரானாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி யது. தற்போது தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தினசரி இறப்பும் அதிகரித்து வருகிறது, இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 42 வார்டுகளிலும் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்ப டுத்தும் வகையில், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுக்களில் வட்டாட்சியா் நிலையி லான அதிகாரி தலைமையில், மருத்துவ அதிகாரி, நகராட்சி அலுவலா், வேளாண் அலுவலா், காவல் துறை அலுவலா்கள் இரண்டு போ், ஓட்டுநா் ஒருவா் என ஒவ்வொரு குழுவிலும் 7 போ் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் அந்தந்தப் பகுதிகளில் கொரோனா பாதித்த வீடுகளை கண்காணித்தல், பொதுமக்கள் முகக் கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். விழுப்புரம் நகரத்தில் கொரானா பாதிப்பு அதிகமுள்ள 14 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.