districts

img

மக்களின் ஒற்றுமையால் மதவாதத்தை முறியடிப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

சென்னை, ஜன. 30 - மக்களின் ஒற்றுமையால் மதவாதத்தை முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மகாத்மா காந்தி அடிகளின் 75ஆவது நினைவு நாளான ஞாயிறன்று (ஜன.30) மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச்சிலை அருகே ‘மதவெறி எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு’ நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா தலைமை தாங்கி னார். உறுதிமொழியை டி.கே.ரங்கராஜன் வாசித்தார். இதன்பின் செய்தியாளரிடம் டி.கே. ரங்கராஜன் கூறுகையில், “ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து மக்களை திரட்டியதில் மகத்தான பங்கு காந்திக்கு உண்டு. கிராமப்புற மக்களை அவர் திரட்டியதால் விடுதலை கிடைத்தது. முஸ்லீம் லீக், கம்யூ னிஸ்ட்டுகளும் விடுதலைக்கு பெரும்பங்காற்றினர். மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த நாதுராம் வினாயக் கோட்சே சுட்டுக் கொன்றான். இதை நியாயப்படுத்தி சினிமா வருவது ஆபத்தானது. இளந்தலைமுறையினரிடம் விஷமத்தனமான கருத்துக்களை புகுத்த முயற்சிக்கின்றனர். இதை மக்கள் எதிர்க்க வேண்டும். தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் சாதி, மத ஒற்றுமையின் மூலம் வீழ்த்துவோம்” என்றார். இந்நிகழ்வில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், பிஷப் தேவசகாயம், கல்வியாளர் தாகூத்மியாகான், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் பேரா.அபுல் பாசல் (தமுமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.