தூத்துக்குடி, செப். 10- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள மானாத்தூர் வடக்குத் தெரு வைச் சேர்ந்த முனிய சாமி(39), ஓட்டப்பிடாரத்தை அடுத்த மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்த ராசுக்குட்டி அழகு என்ற அறிவுமதி(19) ஆகிய இருவ ரும் 15 வயது சிறுமியை பாலி யல் தொந்தரவு செய்த தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து இருவரை யும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில், சிறுமியின் தந்தையும் அடக்கம் என போலீசார் தெரிவித்தனர்.