செங்கல்பட்டு, செப்.20- நந்திவரத்தில் உள்ள பெரிய ஏரியில் வளர்ந்த சீமை கருவலே மரங்களை அகற்ற சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடு வாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், நந்தி வரத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதில், 2 கிலொ மீட்டர் கொண்ட ஏரிக்கரை முழுவதும் வேலிக்காத்தான் என அழைக்கப்படும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவை மதிக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இதனால், ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மேற்படி ஏரிக்கரை பலம் இழந்து உடையும் அபாய நிலை உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு ஏரிக்கரையை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.