districts

img

விநாயகா கார்டன் மழைநீர் பிரச்சனை மேயரிடம் சிபிஎம் நேரில் முறையீடு

திருப்பூர், அக். 14 - திருப்பூர் மாநகராட்சி 6ஆவது வார்டு நல்லாத்துப்பா ளையம் செந்தில் நகர் விநாயகா கார்டன் பகுதியில் கனமழை யால் மக்கள் வெளியே செல்ல முடியாமல், மழைநீர் குடியிருப் புக்குள் புகுந்துள்ளது. எனவே தண்ணீரை அப்புறப்படுத்த வும், சாலைகளை சரி செய்யவும் மேயர் தினேஷ் குமா ரிடம் கோரிக்கை விடப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மார்க் சிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த குடியிருப்பைச் சேர்ந்தோர்  அவரிடம் மனு கொடுத்தனர். இப்பிரச்சனை குறித்து கேட்ட றிந்த மேயர் ந.தினேஷ்குமார், இரண்டாவது மண்டலத் தலை வர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் இப்பிரச்சனையில் உடன டியாக தீர்வு காண்போம் என உறுதி அளித்தனர். இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆ. சிகாமணி, ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், கிளைச்  செயலாளர் எஸ்.ராஜேஷ், பனியன் சங்க நிர்வாகக்குழு  உறுப்பினர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.