districts

img

மாணவர்களுக்கு மனிதத்தை கற்பிக்க, மன தைரியத்தை வளர்க்க ஆசிரியர்களால் மட்டும்தான் முடியும்

மதுரை, செப் 3-  மதுரை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்ச்சி சனிக்கிழமையன்று  கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் செலின் சகாய மேரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:  நம்முடைய ஆளுமைகளை வளர்ப்ப தில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இன்னும் ஐந்து அல்லது எட்டு ஆண்டுகளில் நம்முடைய வேலை வாய்ப்பு என்பது 60 முதல் 70 சத வீதம் வரை குறைந்துவிடும். அந்த அளவிற்கு இயந்திரங்களின் பணி அதிகரித்துவிடும். ஐந்தாயிரம் பேர் பணியாற்றிய ஒரு தொழிற் சாலையில் இனி 10 பேர் 15 பேர் தான் பணி யாற்றுவார்கள் அந்தளவிற்கு நவீன தொழில்நுட்பம்  மிக பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் பணி என்பதும் வரும் காலத்தில் ஆசிரியர்கள் செய்யக்கூடியதாக இருக்குமா? ஏனென்றால் இன்றைக்கு ஒவ் வொன்றுக்கும் இணையதளத்தில் பாடப் பிரிவுகள் வந்துவிட்டன.அதை நாம் தர விறக்கம் செய்து வீட்டில் இருந்தபடியே படித்துக் கொள்ளலாம்.  இப்படி ஒரு தொழில் நுட்ப வாய்ப்புகள் வந்த பின்பு. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை இத்தனை லட்சம் ஆசிரியர்கள் தேவையா என்ற ஒரு கேள்வி தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எழுந்துள்ளது. 

இந்தக் காலத்தில் தான் ஆசிரியர்களின் பணி மிகப்பெரும் பணியாக மாறி உள்ளது. பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கு ஒரு செயலி போதும். அது மட்டும் கல்வியினுடைய வேலை அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் மனிதத்தை சொல்லிக் கொடுக்க ஒருவர் வேண்டும். அப்படி அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி உள்ள நமக்கு மனித சமூகத்தை கையாளுவதை சொல்லிக் கொடுப்பவர்தான் ஆசிரியர்கள்.  இன்றைக்கு மாணவ,மாணவிகள் நீங்கள் கீழே விழுந்தாலும் எழுந்து நிறுத்துவ தற்கு ஒரு அப்ளிகேஷன் மற்றும் ஆப்புக ளால் முடியாது. அது ஒரு ஆசிரியரால் மட்டும் தான் முடியும்.   இன்றைக்கும் மாணவர் சமூகம் எளிதில் மனம் உடைந்து போகக்கூடிய சமூகமாக உள்ளது அது தேர்வில் தோல்வியடைந்தா லும் சரி, அல்லது வீட்டில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காதல் தோல்வியாக இருந்தாலும் சரி இது போன்ற பிரச்சனை களை சமாளிக்க முடியாத எளிதில் முறிந்து விழுகின்ற மரக் கொப்புகளாக மாணவர் சமூகம் இன்றைக்கு உள்ளது.  

இவைகளை எல்லாம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. நாம் தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது. ஒரு பேருந்துக்காக நிற்கும் போது அந்தப் பேருந்து சென்றுவிட்டால் அடுத்த பேருந்துக்காக எப்படி காத்திருக்கிறோமோ அதுபோல் தான் நம்முடைய வாழ்க்கை யும்.  தேர்ச்சி விகிதம் குறைந்து மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்க ளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கான மன தைரியத்தை உருவாக்கக் கூடியவர்கள்தான் ஆசிரியர்கள். ஆசிரியர் பணி என்பது பாடப் புத்தகம் சார்ந்தது அல்ல. பாடப்புத்தகத்தை கடந்து மாணவர்க ளின் இதயத்தோடு நெருக்கமாக இருப்ப வர்கள்தான் ஆசிரியர்கள். நிச்சயமாக அந்தப் பணியை நீங்கள் சிறப்பாக செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களோடு தோழமை கொள்வது தான் மிகவும் முக்கியம்.  ஒரு மாணவனை அங்கீகரிக்கவும் அவனு டைய கனவுகளை வளர்க்கவும் அவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று நினைப்ப தையும் ஏதாவது ஒரு வகையில் அவன் சாதிப்பான் என்று நினைப்பவர்கள்தான்  ஆசிரியர்கள். அந்த வகையில் மாணவர்க ளுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடி னார். இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

;