மதுரை, ஜூலை 3- மதுரை அவுட் போஸ்ட் பந்தயத்திடல் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்றனர்.
மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் புதனன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் க. பாலா, மாவட்ட துணைச்செயலாளர் பா. சுபாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டீலன் ஜெஸ்டின், கல்லூரி கிளைச் செயலாளர் ரேகன், ஜெயமோகன், வீரா, சாகின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.