districts

img

கம்யூனிஸ்ட்டுகளை தரக்குறைவாக நடத்தும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.13-  பொதுவாழ்க்கையில் ஈடு பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுகளை தரக்குறைவாக நடத்தும் ஆலங்  குடி காவல் ஆய்வாளர் மீது தமி ழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சியுடன் கூட்டணி யில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமூகத்தில் நிலவும்  அவலங்களை சுட்டிக்காட்டுவதி லும், போராட்டங்களை முன்னெ டுப்பதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றைக்கும் தயங்கியது இல்லை. இத்தகைய போராட்டங் களில் போது, காவல்துறைக்கும் எங்களுக்கும் இடையே அவ் வப்போது சலசலப்புகள் வருவது இயல்பானதே. எங்கள் போராட் டத்தில் நாங்கள் எப்படி உறுதி யாக இருக்கிறோமோ, அதைப் போல மேலிட உத்தரவுகளுக்கு கட்  டுப்பட்டு கடமையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறைக்கும் உண்டு. இதை நாங்களும் காவல்துறை யினரும் புரிந்தே வைத்திருக்கி றோம். இதனால், போராட்ட நேரங்  களைத் தவிர மற்ற நேரங்களில் காவல்துறையினருக்கும், கம்யூ னிஸ்ட்டுகளுக்கும் மரியாதை கலந்த நட்பு தொடர்ந்தே வருகிறது. ஆனால், சமீப காலமாக காவல்  துறையில் உள்ள சில அதிகாரி கள் கம்யூனிஸ்ட்டுகளின் போராட் டக்களில் நடந்துகொள்ளும் விதம்  உவப்பானதாக இல்லை. ஆர்ப் பாட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி போன்ற ஜனநாயக வடி விலான போராட்டங்களில்கூட அவர்கள் காட்டும் கடுமை கண்ட னத்துக்குரியது.

அதனொரு பகுதி யாகத்தான் ஆலங்குடியில் நடந் துள்ள சம்பவமும் காட்டுகிறது. கடந்த 11-ஆம் தேதி காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தி யது. இந்தப் போராட்டம் புதுக்  கோட்டை மாவட்டம் ஆலங்குடி யிலும் நடைபெற்றது. மாவட்டத் தில் 10 இடங்களில் நடைபெற்ற போராட்டமும் காவல்துறை அனு மதி அளித்த நேரத்திற்குள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல, ஆலங்குடியிலும் மனிதச் சங்கிலி போராட்டம் வெற்றி கரமாக நடைபெற்றது. போராட்டம் முடிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள்  சிலர் சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் அழகம்மை எங்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செய லாளர் எல்.வடிவேல் உள்ளிட் டோரை ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளார்.  நாங்கள் ஓரமாக அமைதி யாகத்தானே நிற்கிறோம். எங்களை ஏன் இப்படி தரக்குறைவாக நடத்து கிறீர்கள் எனக் எங்கள் கட்சியினர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த பயிற்சி துணை ஆய்  வாளர் ஜெகன் நிவாஸ் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முற்பட்டார். இதனைத் தொடர்ந்து எங்கள் கட்சியினர் காவல்துறையினரை கண்டித்து உடனடியாக சாலைமறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மேலும், நடந்  துள்ள சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாள ரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனு அளித்து இரண்டு நாட்களாகி யும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக ஆலங்குடி பகுதி யில் தொடர் திருட்டு வழிப்பறி, அனு மதியற்ற நேரங்களில் டாஸ்மாக் பார்களில் மதுபாட்டில்கள் விற் பனை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் ஆடு திருட்டும் ஆலங்குடி வட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஆலங்குடி காவல்துறை, கம்யூ னிஸ்ட்டுகள் மீது பாய்கிறது. சமூக அவலங்களுக்கு எதிரான எங்கள்  போராட்டங்களால் ஆலங்குடி  காவல்துறையினர் எரிச்சலடைந் துள்ளனர். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்  கோட்டை மாவட்டக்குழு கடும் கண்  டனத்தை தெரிவித்துக் கொள்கி றது. தமிழக அரசு, மாவட்ட நிர்வா கமும் விசாரணை நடத்தி தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஜன நாயக சக்திகளைத் திரட்டி காவல்  துறையினருக்கு எதிராக மிகப்  பெரிய போராட்டத்தை முன்னெ டுப்போம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;