districts

img

மழையால் சேதமான நெல் பயிர் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக.20- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில்  மூழ்கி முளைத்துவிட்டது.

 சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் எச்சூர், கீழ்நேத்தப்பாக்கம், ஆக்கூர், மணவாடி, வெம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பாதிக்கப் பட்ட நெல் விவசாயிகளுக்கு முழுமையாக விசாரணை நடத்தி முறையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செய்யாறு சாராட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்க டேசன், மாவட்டச் செய லாளர் உதயகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப. செல்வன், சிஐடியு நிர்வாகி வே. சங்கர் உள்ளிட்ட பலர் இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.