districts

திருச்சி விரைவு செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்  நாராயணசாமி நினைவு தினம்

மன்னார்குடி, மே 9 - சுதந்திரப் போராட்ட வீரர் ஜம்பவனோடை நாவன்னா என்றழைக்கப்படும் ரெ.நாராயணசாமி தேவரின் 16 ஆவது நினைவுதினம் முத்துப்பேட்டையில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமுஎகச முத்துப்பேட்டை செயலாளர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். தமுஎகச கிளைத் தலை வர் கனகசுந்தரம் துவக்க உரையாற்றினார். சிபிஎம் நகர செய லாளர் சி.செல்லதுரை, ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்தி ரன், ஆசிரியர் திருஞானசம்பந்தம், தொலைதொடர்புத் துறை  சங்கர், சிபிஎம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்: சிஐடியு ரத்த தான முகாம்

 திருவாரூர், மே 9 - தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின ரத்ததான முகாம் திருவாரூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமையில் நடைபெற்றது. மருத்து வக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் பிரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ரத்த தான முகாமை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செய லாளர் டி.முருகையன் வாழ்த்திப் பேசினார். 20 பேர் ரத்த  தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களைப் பாராட்டி மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் பி.என்.லெனின், மாவட்ட செயலாளர் வி.சிவபாலன், லிகாய் சங்க கோட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி, கூட்டுறவு சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். செல்வம், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் பி.கஜேந்தி ரன், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பு.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக திருவாரூர் சிஐடியு அலுவலகத்தில் வி.பி.சிந்தன் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.


பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சிராப்பள்ள, மே 9 - திருச்சி கே.சாத்தனூர் கவிபாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்  சுந்தர். இவரது மனைவி புவனேஸ்வரி  (28) கீழக்குறிச்சி கிராம தபால் அலுவலகத்தில் (ஜி.டி.எஸ்.) ஊழியராக பணி யாற்றி வருகிறார். தினமும் மொபட்டில் சென்று சம்பந்தப் பட்டவர்களின் வீட்டு முகவரியை தேடிச் சென்று உரிய தபால் களை விநியோகிப்பது வழக்கம். அதன்படி, வழக்கம்போல் மாலையில் பணி முடிந்து தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில், பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஜி.கார்னர் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் புவனேஸ்வரியை மோது வது போல் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில்  அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு  தப்பி சென்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி பொன்மலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


குறைந்த வாடகையில்  உழவு செய்ய அறிவுறுத்தல்

அரியலூர், மே. 9- அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டு தோறும்  1,00,000 ஹெக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப்  பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் 38,000  ஹெக்டேர் பாசன வசதியுடனும், மீதமுள்ள 62,000 ஹெக்டேர் மானாவாரிப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. அரிய லூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 954 மில்லி மீட்டர்  ஆகும். கோடைகாலத்தில் சராசரியாக 83 மி.மீட்டர் மழையளவு பெறப்படுகிறது. தற்சமயம் அரியலூர் மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்யலாம். இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறையின் அலுவலர்களை தொடர்பு  கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


இந்தி மொழியில் அலுவலக கோப்புகள்? ஜிப்மர் இயக்குநரின் அறிவிப்புக்கு பாபநாசம் எம்எல்ஏ கண்டனம்

பாபநாசம், மே 9 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஜவஹர்லால் நேரு  முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (ஜிப்மர்) இயக்குநர் அலுவலக கோப்புகள் அனைத்தும் இனி  இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று ஆணை  பிறப்பித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுநாள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் கோப்புகள் எழுதப்படும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது இயக்கு நரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜிப்ம ருக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கி லம் மட்டுமே அறிந்தவர்கள். இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு துணை போகும் ஜிப்மர் இயக்குநரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக அந்த  சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


மண் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

 தஞ்சாவூர், மே 9 - தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள  வேங்கைராயன் குடிக்காடு, கீழத் தெருவை சேர்ந்த மானா வாரி விவசாயிகள் சங்கத் தலைவர் து.வைத்திலிங்கம் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், “வேங்கைராயன் குடிக்காடு கிராமத்தில், ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக வசித்து வரு கிறோம். எங்களது, விவசாய நஞ்சை மற்றும் புஞ்சை  நிலங்கள் அனைத்தும் சுமார் 300 ஏக்கர் கொ.வல்லுண்டன் பட்டு ஊராட்சிக்கும், நாஞ்சிகோட்டை ஊராட்சிக்கும் உட்பட்ட தாக உள்ளது. செங்குளம் வழியாக இந்த வயல்களுக்கு சென்று வர கிராம மண் சாலை உள்ளது. மழைக்காலங்களில் மண் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் வயல்களுக்கு சென்று வர விவசாயிகளுக்கும், வேளாண் கருவிகளை கொண்டு செல்லவும் வெகு சிரமமாக உள்ளது. எனவே, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள மண் சாலையை, தார்ச் சாலையாக தரம் உயர்த்தித் தருமாறு விவ சாயிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக பலமுறை தங்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து இந்த மண் சாலையை தரம் உயர்த்தி தருமாறு பணி வுடன் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.


 

;