நாகர்கோவில், டிச.6- நியாயவிலை கடைகளி லும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்திட நடவ டிக்கை எடுக்க கோரி தமிழ் நாடு தென்னை விவசாய சங்கத்தினர் மனு அளித்த னர். மாவட்ட தலைவர் என்.முருகேசன், செயலா ளர் டி.வின்சென்ட், துணைத் தலைவர் ஜே.சைமன் சைலஸ், எஸ்.எஸ்.சந்திரன், தாமோதரன், கோபால் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, துணை செய லாளர் எஸ்.விஜி ஆகியோர் கூட்டுறவு சங்க மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருந்ததாவது: 16.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர் கூட்டத் தில் மாவட்ட தென்னை விவ சாயிகளின் நலன்கருதி கன்னியாகுமரி மாவட்டத் தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விற் பனை செய்ய ஆணை பிறப் பிக்கப்பட்டுள்ளது
என்ற தங்கள் அறிக்கைக்கும், நட வடிக்கைக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அத்துடன் சிறு, குறு தென்னை விசாயிகள் நிறைந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத் தில் விவசாயிகள் இடைத் தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வ திலிருந்து பாதுகாக்க, அனைத்து பிரதான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயி களிடம் உரித்த தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். உரித்த தேங்காய் கிலோ 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கேண்டும். தற்போது தலக்குளம், இரணியல் வேளாண் கூட்டு றவு கடன் சங்கம் மற்றும் முகிலன்விளை வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் தேங்காய் எண்ணெய் உற் பத்தி செய்யும் அலகுகள் செயல்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. எனவே பிரதான வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகளிலும் எண்ணெய் உற்பத்தி செய்து வினி யோகிக்கவும், தேங்காய் கொள்முதல் செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசிடம் சிறப்பு நிதி கேட்டு வாங்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.