தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்)-ன் சார்பில், பனைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் கவிதா ராமு திங்கள்கிழமை திறந்து வைத்தார். நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை பனைப் பொருள் திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், கதர் அங்காடி மேலாளர் என்.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.