வாலிபர் சங்கம் வலியுறுத்தல் தஞ்சாவூர், அக்.2- செங்கிப்பட்டியில் அரசு ஆரம்ப சுகா தார நிலையம் அமைக்க வேண்டும் என வாலி பர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பூத லூர் தெற்கு ஒன்றியச் சிறப்பு பேரவை செங்கிப் பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை பெற்றது. வாலிபர் சங்கம் ஒன்றியத் தலைவர் எல்.முருகானந்தம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கரிகாலன் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா துவக்க உரையாற்றினார். வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விவ சாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.தமிழரசன், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வியா குலதாஸ், மாதர் சங்கம் ஒன்றியச் செயலா ளர் வி.அஞ்சலிதேவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர் வி.பிரபு நன்றி கூறினார். தொடர்ந்து, வாலிபர் சங்க சந்தாத் தொகை மாநிலத் தலைவர் கார்த்திக்-யிடம் வழங்கப்பட்டது. புதிய செயலாளராக தமிழ்செல்வன், தலைவராக முருகானந்தம், பொருளாளராக முருகன், துணைத் தலைவர்களாக விமல், நல்லேந்திரன், துணைச் செயலாளர்களாக பிரபு, ஆனந்த் தேர்வு செய்யப்பட்டனர். செங்கிப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சேதம டைந்த செங்கிப்பட்டி மேம்பாலத்தை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் உடனடியாக சீர மைக்க வேண்டும். பூதலூர் அரசு மருத்து வமனையில், 24 மணி நேரமும் பணியில் மருத்துவர்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூறாய்வு கூடத்திற்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மருந்துகள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.