districts

காவிரி கூட்டு குடிநீர் வழங்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.19 - திருச்சி புறநகர் மாவட் டம் துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்தும், துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள குண்டும் குழியான சாலையால் உயிர் பலி ஏற்ப டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை யூர் நகருக்கு தினந்தோறும் காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சங்கிலிதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஜே.சுப்பிரமணி யன், ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், பி.பொன்னுசாமி ஆகியோர் பேசினர்.  மூத்த தோழர் சி.எம்.முத்துசாமி நன்றி கூறினார்.