தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, சானூரப்பட்டி மேலக்காலனியில் நிலத்தில், நில குடியேற்ற சங்கத்தில் உறுப்பினர் அல்லா தவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை 2008-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்து உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டு மென வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூத லூர் தெற்கு ஒன்றியம், சானூரப்பட்டியில் கிளைச் செயலாளர் எஸ்.நல்லேந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் நில குடியேற்ற சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள குட்டை குளத்தையும், குடியிருப்புப் பகுதியையும் தேசிய நெடுஞ்சா லைக்கு மாற்றியதை ரத்துச் செய்ய வேண்டும். சானூரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.