districts

img

பாலஸ்தீனத்தை பாதுகாக்க கோரியும் இஸ்ரேலை கண்டித்தும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 3 - இனப் படுகொலையை உடனே நிறுத்தி பாலஸ்தீனத்தை பாதுகாத்திடக் கோரியும், இஸ் ரேல் அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி,  ஜனநாயக இயக்க அமைப்பு களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், சிபிஐ தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மொய்தீன் அப்துல்  காதர், தமுமுக மாவட்ட துணை  செயலாளர் ஹிமாயூன் ஆகியோர்  பேசினர். சிபிஎம் பாலக்கரை பகுதி  செயலாளர் சுரேஷ் நன்றி கூறி னார். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாச்சியார்கோவில் கடைத் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாதர், வாலிபர் சங்கத்தினர் பங் கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கண்டன உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஎம்எல், மதிமுக, திரா விடர் கழகம், மனித நேய மக்கள்  கட்சி, தமமுக, திராவிடர் விடு தலை கழகம் உள்ளிட்ட முற்போக்கு  அமைப்புகளின் நிர்வாகிகள் உரையாற்றினர். திருவாரூர் திருவாரூர் புதிய ரயில் நிலை யம் எதிரே நடைபெற்ற பெருந்தி ரள் ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக் குழு உறுப்பினருமான நாகைமாலி கண்டன உரையாற்றினார்.  அரியலூர் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எம்.வெங்கடாசலம் தலைமை யில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் முன்னிலை வகித்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், ஏ.கந்தசாமி, ஜெ.ராதா கிருஷ்ணன், துரை.அருணன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.

;