தஞ்சாவூர், மே 31-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 2003-2006 கல்வி ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பேராவூரணி எஸ்.டி.டி ரெசிடென்சி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் கணவர், மனைவி மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளு டன் பங்கேற்றனர். இந்த முன்னாள் மாணவர்களில் நான்கு பேர் கல்லூரி முதல்வராகவும், 6 பேர் அரசு ஊழியர்களாக வும், பலர் விவசாயிகள், தொழில் அதிபர்களாகவும் தற்போது உள்ளனர்.
நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். கல்லூரி விரிவுரையாளர் அம்பிகா வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், சீனிவாசன், சிலம்பரசன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
நிகழ்ச்சியில், இனிவரும் ஒவ்வொரு வருடமும், இது போல் நடத்துவது என்றும், முன்னாள் மாணவர்களில் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது, வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தருவது, நலத்திட்டங்கள் செய்வது, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.