புதுச்சேரி,மார்ச் 29- இந்தியா கூட்டணியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெ.வைத்தி லிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை புதுச்சேரி எல்லையான காலாப்பட்டில் இருந்து திறந்த வாகனத்தில் துவக்கினார். இப்பிரச்சாரத்தில் திமுக மாநில அமைப்பாளர் இரா.சிவா,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிபிஐ மாநில செயலாளர் அ.மு. சலீம்,விசிக மாநில செயலாளர் தேவ. பொழிலன், மதிமுக தலைவர் கபிரி யேல் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயண சாமி,முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான்,சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். முன்னதாக தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க காலாப்பட்டில் துவங்கி பிரச்சாரத்தில் முத்தியால்பேட்டை வரை வழி நெடுக பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.