districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்.2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய சென்னை மாவட்டத்தில் வியாழனன்று (ஜன.23) வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பேசினர். 211 பேர் கொண்ட வரவேற்புக் குழுவின் தலைவராக எம்.வி.கிருஷ்ணன், செயலாளராக ஜி.செல்வா, பொருளாளராக வி.சீனிவாசன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.