கார்ட்டூன் நெட்வொர்க்கில் மே 5 ஆம் தேதி புதிய நிகழ்ச்சி
சென்னை, ஏப். 25- கார்ட்டூன் நெட்வொர்க் இந்தியத் தொலைக்காட்சி யில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முதன்முறை யாக “ஒன் பீஸ்: லேண்ட் ஆஃப் வானோ ஆர்க்” கதைக்களத்துடன் உலகளவில் பாராட்டப்பட்ட தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது. மே 5 ஆம்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையும் அதன் பின்னர் திங்கட் கிழமை மதியம் 1மணிக்கும் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு.கலாசார நிகழ்வும் மற்றும் காவிய மான கடற்கொள்ளையர் சாகசக் கதையும் கார்ட்டூன் நெட்வொர்க்கில் இடம் பெறவுள்ளது. ஒன் பீஸ் என்பது, தடுக்க முடியாத குரங்கு டி. லஃபி, கடற்கொள்ளையர்களிட மிருந்து தப்பிச் சென்றதை விவரிக்கும் ஒரு காவிய மான கடல் கதையாகும்.
லாரியை கடத்தியவர் கைது
சென்னை, ஏப். 25- சென்னை கோயம்பேட்டில் ஆயிரம் இளநீர் காய்களோடு கடத்தப்பட்ட லாரியை காவல் துறையினர் மீட்டு, இளைஞரை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சேர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (45). லாரி ஓட்டுநரான இவர், அங்கிருந்து சுமார் 4,600 இளநீர் காய்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புதன்கிழமை வந்தார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் இளநீர் காய்களை இறக்கிவிட்டு, சுமார் ஆயிரம் இளநீர் காய்களோடு கோயம்பேடு 100 அடி சாலைக்கு வந்தார். அங்கு ஜெகதீஷ், சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு லாரியை நிறுத்திவிட்டு, லாரியிலேயே சாவியை வைத்துவிட்டு அங்குள்ள ஒரு டீ கடைக்குச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் வந்தபோது, இளநீர் காய்களோடு லாரி கடத்தப்பட்டி ருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சென்னை முழுவதும் உஷார்படுத்தப்படுத்தனர். கடத்தப்பட்ட லாரி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி, கொரட்டூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த லாரியை மீட்டனர். மேலும் லாரியை கடத்தி வந்ததாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த அருள் (38) என்பவரை கைது செய்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தங்கம் விலை சற்று குறைந்தது
சென்னை, ஏப்.25- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,160 குறைந்துள்ளது. இதையடுத்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6700க்கும் சவரன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,360 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,170 ஆகவும் விற்பனையானது.
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி
விழுப்புரம், ஏப்.25- விழுப்புரம் மாவட்டத் தில் மாணவர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வரும் 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் நகராட்சி பகுதி வழுதரெட்டி, எல்லீஸ் சத்திரம் சாலையில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் உள்ளது. இங்கு, இந்த கல்வியாண்டில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவங்க வுள்ளது. இப்பயிற்சியில் மாணவர்கள் சேர இணைய வழியில் (www.tncuicm. com) மட்டுமே விண்ணப் பிக்கலாம். இதில் சேர விண்ணப்பிக்கும் தேதி, பயிற்சி கட்டண விவரங்கள், சேர்வதற்கான நிபந்தனை கள் குறித்த விவரங்கள் இணையவழியில் வெளி யிடப்படும். இதுபற்றி மேலும் விவரங்கள் பெற விரும்பு வோர், மேலாண்மை நிலையம், முதல்வர் (பொறுப்பு), செல்பேசி 8825928327, அலுவலக தொலைபேசி எண்: 04146 259467 மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்
சென்னை, ஏப். 25- இந்திய அரசின் தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) திட்டம் மற்றும் ஒருங்கி ணைப்பு பிரிவு செயலாளர் மரு. பி. ஸ்ரீனி வாஸ்-க்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக் கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மரு. பெருமாள் பிள்ளை கடிதம் எழுதி யுள்ளார், அதில் அவர் மருத்துவ மாணவர்களுக் கான ஊக்கத்தொகை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை போன்று அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதிய விவரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தர விட வேண்டும் என கோரியுள்ளார். அதே நேரத்தில், மருத்துவக் கல்லூரி களில் இளைய மருத்துவர்களை உருவாக்கி வரும் மருத்துவ ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் என்எம்சி-யின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் இருக்கும் நிலை யில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம் மட்டுமே உள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் மருத்துவர்கள் பணிச்சுமை, மிகவும் குறைவான ஊதியம் என தொடர்ந்து வேதனையுடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அரசு மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும். அல்லது அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப் பட்டை நான்கு தர வேண்டும் என மருத்துவ ஆணை யத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மின்சார கம்பி உரசியதால் தீ பிடித்த லாரி
கிருஷ்ணகிரி,ஏப்.25- தேன்கனிக்கோட்டை வட்டம், கும்மளாபுரத்தில் இருந்து தளிக்கு ரேசன் கடை குடோனிலிருந்து சாக்கு (கோணி) பைகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. வழியில் மின்சார கம்பி உரசியதால் சாக்கு பை கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. உடனே வாகனம் நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறை மூலம் சாக்குகளில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 14,000 சாக்கு பைகளும் எரிந்து சேதமடைந்தது. சரக்கு வாகனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் ரூ1.20 லட்சம் பறிமுதல்
கடலூர், ஏப்.25- கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முறைகேடு கள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், சுமூகமாக நடந்து கொள்ளவும் உள்ளூர் தணிக்கை குழுவின் உதவி இயக்குநர் மற்றும் ஆய்வாளருக்கு லஞ்ச பணம் கொடுக்க இருப்பதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் கடலூர் மாவட்ட துணை ஆய்வுக் குழு அலுவலர் சுபத்ரா ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத லஞ்ச பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் தமுஎகச புத்தக தின விழா
சிதம்பரம், ஏப்.25- சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சிதம்பரம் கிளை சார்பில் உலக புத்தக தினம் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமுஎகச மாவட்ட குழு உறுப்பினர் பாரதி தமிழ் முல்லை தலைமை தாங்கினார். சிதம்பரம் கிளை யின் செயலாளர் ராம.ராகவேந்திரன் வர வேற்றார். நிர்வாகிகள் கே.என்.பன்னீர் செல்வம், டி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் கவி ஞர் பால்கி, மாவட்டத்தலைவர் பேராசிரி யர் ஜானகிராஜா, பேராசிரியர் சி.பழனி வேல்ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துகுமரன், இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி குமரவேல், தமுஎகச சிதம்பரம் கிளை இணைச்செயலாளர் அ.காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவர் எஸ்.லோகராஜன் நேர்மை யாக பணியாற்றியமைக்காக கவுரவிக்கப் பட்டார். நிகழ்வின் நிறைவில் சங்கத்தின் துணைத் தலைவர் என்.கலியமூர்த்தி நன்றி கூறினார்.