சிதம்பரம் அருகே கீழ்நத்தம் கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் நெடுஞ்சேரலாதன் தாயார் லட்சுமி (92) கடந்த 20-ந்தேதி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையறிந்த கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினரை திங்கள்கிழமை (ஜூலை 22) சந்தித்து ஆறுதல் கூறினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் அப்போது உடன் இருந்தனர்.