கடலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பண்ருட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், நகரச் செயலாளர் ஆர்.உத்ராபதி, வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் கே.ராஜேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.துரை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.