அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு நெமிலி பேரூராட்சி பகுதிகளில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர். வெங்கடேசன் தலைமையில் வியாழனன்று (ஏப். 11) ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினர் கே. சிவகுமார், ராஜா, செல்வமணி, வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.