districts

img

சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை மாநகராட்சி 148ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.வெள்ளைச்சாமி, புதனன்று (பிப்.2)  வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் ச.சு.ரங்கநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் உடன் உள்ளார். இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கி யம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், திமுக வட்டச் செயலாளர் எம்.கே.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 12 வார்டில் திமுக கூட்டணியில் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.மாசிலாமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக நகர செயலாளர் குமார். சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் செங்கல்பட்டு நகராட்சி 29ஆவது வார்டில் போட்டியிடும் என்.அன்பு புதனன்று (ஜன. 2) வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் செங்கல்பட்டு  பகுதி செயலாளர் கே.வேலன் உள்ளார்.

***