districts

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

ஈரோடு, செப்.7- தொழிலாளர் நலன் மற்றும் திறன்  மேம்பாட்டுத்துறையின் சார்பில் தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு ஈரோட்டில் ரூ.41,48,883 மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகர ணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை  வகித்தார். மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் மற்றும் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம்  தலைவர் பொன்குமார் ஈரோடு மாவட் டத்தில் பதிவு பெற்ற 2666 கட்டுமானத்  தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.41,48,883  மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை யில் 10843 தொழிலாளர்களின் குழந்தை களின் கல்விக்கான உதவித்தொகை யாக ரூ.2,11,34,000 வழங்கப்பட்டுள் ளது. இதேபோன்று, 30 தொழிலாளர் களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.1,06,000, 2 தொழிலாளர்களின் மகப் பேறுக்கான உதவித்தொகையாக ரூ. 12,000, 26 தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கான உதவித்தொகையாக ரூ.13,000, இயற்கை மரணமடைந்த 347 தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 99,81,000, விபத்தில் மரணமடைந்த 9 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.9,25,000, பணியிடத்து விபத்து மரண மடைந்த 1 தொழிலாளியின் குடும்பத் திற்கு ரூ.5,00,000, 60 வயது  நிறைவடைந்த 2496 தொழிலாளர் களுக்கு புதிய மாதாந்திரம் ஓய்வூதிய மாக ரூ.24,96,000 மொத்தம் 13755 பதிவு  பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ. 3,51,67,000 மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.

;