districts

img

நெடுஞ்சாலைத்துறை பொறியாளரின் நவீன தீண்டாமை

திருப்பூர், அக்.27- சாதிய வன்மத்துடன் நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கும் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியா ளராகப் பணியாற்றி வரும் இரா. கணேசமுர்த்தி என்பவர், ஆதிக்க சாதி குணத்துடன் நவீன தீண்டாமை யைக் கடைப்பிடித்து, பணியாளர் களை இழிவுபடுத்தும் செயலில் ஈடு பட்டு வருகிறார். குறிப்பாக, ஆய் வுக்கூட்டம் என்ற பெயரில் சாலைப்  பணியாளர்களை இருக்கை போடா மல் நிற்க வைத்து அச்சுறுத்துவது, சாலைப் பணியாளருக்கு சம்பளம் மற்றும் முன்பணம் தர மறுப்பது என்று ஆணவப் போக்குடன் செயல் படுகிறார் என்று தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ள னர். அவர் சாலைப் பணியாளர் களை இழிவுபடுத்தி, மனித உரிமை மீறல் பிரச்சனைகளை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளனர். எனவே, தாராபுரம் உதவி கோட்டப்  பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தாராபுரம் கோட் டப் பொறியாளர் ராணி, அவருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இப்பி ரச்சனையில் தலையிட்டு, சாலைப்  பணியாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சாலைப் பணியா ளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ள னர். எனினும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து, எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் அளிக்க  இயலாது என்று தாராபுரம் கோட்டப் பொறியாளர் ஏளனப் போக்குடன் செயல்படுவதாகக்கூறி, சாலைப் பணியாளர்கள் தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு அக்.22 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். கடந்த ஆறு நாட்களாக சாலைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எனினும்  உயர் அதிகாரிகள் இப்பிரச்ச னைக்கு தீர்வு காணாமல் மெத்த னப் போக்குடன் உள்ளனர். சாலைப் பணியாளர்கள் சங்கம் அடுத்த கட்ட மாக திங்களன்று மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் சாலைப் பணியாளர்களை அணி திரட்டி தாராபுரம் கோட்டப் பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தை வலுப்படுத்துவது என்றும், திருப்பூர் கண்காணிப்புப்  பொறியாளர் அலுவலகத்தின் முன்பு  போராட்டம் நடத்துவது என்றும் தீர் மானித்துள்ளனர்.