கோவை, டிச.29- கோவை தண்ணீர் பந் தல் பகுதியில் 8 மாதங்க ளுக்கு மேலாகியும் சீர் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி களை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பீளமேட்டை அடுத்துள்ள தண்ணீர்பந் தல் பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின் றன. இந்நிலையில், இங் குள்ள விநாயகபுறம் பகுதி யில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஆனால், கொரோனா நோய்த்தொற் றுப் பரவல் உள்ளிட்ட காரணங்களால் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேதமடைந்து விபத்துகள் ஏற்படும் வண்ணம் தற்போது காணப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்ற னர். எனவே, சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர்.