districts

img

கேங்மேன்களை கள உதவியாளராக பதவி உயர்வு வழங்குக

ஈரோடு, பிப். 7- கேங்மேன் பணியாளர்களை இள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, சிஐடியு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களாக பணி யாற்றி வருபவர்களை கள உதவியா ளராக பதவி மாற்றம் செய்ய வேண் டும். பணியிட மாறுதல் மற்றும் உள் முக தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணைச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி கிளைச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, தலைவர் எம்.ஆர்.பெரி யசாமி, துணைச் செயலாளர் வி.ஏழு மலை ஆகியோர் பேசினர். ஈரோடு மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சக்திவேல் நன்றி கூறினார். இதேபோன்று, கோபி மேற் பார்வை பொறியாளர் அலுவலகம்  முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தலைவர் பி.சேகர் தலைமை வகித் தார். இந்த ஆர்பாட்டத்தில் செயலா ளர் கே.பாண்டியன் கோரிக்கை களை விளக்கி பேசினார். இறுதி யாக ஜி.அங்கப்பன் நன்றி கூறி னார்.  கோவை இதேபோன்று , கோவை சிவா னந்தகாலனி மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  மாநிலச் செயலாளர் டி.மணி கண்டன்  தலைமை தாங்கினார். லோகுநாதன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் கோரிக் கைகளை விளக்கி மின் ஊழியர்  மத்திய அமைப்பின் நிர்வாகிகள் வி.மதுசூதனன், செபஸ்டியன், எம். மணிகண்டன், சாதிக்பாட்சா, கலைச் செல்வி, என்.ரத்தினக்கு மார், பி.காளிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், இணைச் செயலாளர் எஸ்.விஜயன் நன்றி கூறினார்.