கோவை, மார்ச் 29- இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பெற்ற மாணவிகளுக்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்து தெரிவித்தார். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 13 மணி நேரம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இரண்டு கண்களை கட்டிக்கொண்டு லயா, லஸ்யா ஆகிய இரட் டையர்கள் சிலம்பம் சுற்றி சாதனை படைத் துள்ளனர். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கிகரித்துள்ளது. இதேபோன்று 12 பானைகளின் மீது நின்று 12 மணி நேரம் சஞ்சீவ் என்பவர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை யாளர்கள் தங்களின் சாதனை சான்றிதழை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் காட்டி வாழ்த்துப் பெற்றனர். இவர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன், சின்னவேடம்பட்டி முல்லை தற்காப்புக் கலை விளையாட்டு கழக பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.