districts

அவிநாசியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவக்கம்

அவிநாசி, செப்.16- அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர்,  பல்லடம் வனம் பவுண்டேசன் அமைப்பு சார்பில் அவிநாசி தாமரைக்குளத் தில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜ்,  சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.கே.ஆறு முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அவிநாசி சமூக அமைப் பினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.