districts

img

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு

உதகை, செப்.30-  இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடுவதாக ராகுல்காந்தி எம்.பி., குற்றச்சாட்டினார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சியின் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டார். இதன்பின் கூடலூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகையில், எனது சகோதரி சிம்லாவில் ஒரு வீடு கட்டி னார். அது அவருக்கு ஒரு கனவாக இருந் தது. அவ்வளவு அழகான ஊர். ஆனால், கூட லூர் வந்த பிறகு தான் இவ்வளவு அழகான காலநிலையில் உள்ள ஊரை பார்க்கிறேன். இங்கு மூன்று மொழிகளான தமிழ், மலை யாளம், கன்னடம் ஆகியே மூன்று மொழி களை மக்கள் பேசுகின்றனர். இங்கு மூன்று  கலாச்சாரங்களும் உள்ளன. இங்கு ஒருவரை ஒருவர் மதிக்கின்றனர். பாசத்தோடு நடந்துக் கொள்கின்றனர். யாரும் தரக்குறைவாக நடந் துக்கொள்வதில்லை. இந்திய ஒற்றுமை பய ணம் ஆரம்பிக்கும் போது இந்த கனவு தான் என்னிடம் இருந்தது. அதை இங்கு கண் கூடாக பார்க்கிறேன். மூன்று மொழிகள் பேசும்  மக்கள், ஒற்றுகையாக உள்ளது போல தான் இந்தியாவிலும் ஒற்றுமை ஏற்பட வேண் டும். இவ்வளவு பெரிய கூட்டத்தில், ஆண், பெண், சிறுவர், முதியவர் அனைவரும் ஒன் றாக ஒற்றுமையோடு நடந்து வந்தனர். இங்கு யாரும் எந்த மொழியும் பேசக்கூடாது என சொல்வதில்லை. இந்தியா முழுவதிலும் இந்த எண்ணம் இருக்க வேண்டும். சில இயக் கங்கள் இங்கு அமைதியை குலைக்க மக்க ளிடம் வெறுப்புணர்வை தூண்டுகின்றன.

யாரும் எந்த மொழியை பேசலாம். கலாச் சாரத்தை பின்பற்றலாம். யாரும் யாரையும் அவமதிக்கக் கூடாது. பிரிவினையை நாங் கள் அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் ஆளுநர்களை இயக்க அரசுக்கு எதிராக செயல்பட வைக் கின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக் கிறது. ஒரு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவரா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் ஆட்சியில் தலையிடுவது எந்த  விதத்தில் நியாயம். பாஜக அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க பார்க்கிறது.  பெட்ரோல், டீசல் வருவாய், ஜிஎஸ்டி வரு வாயை ஆட்சியாளர்கள் மக்களின் பாக் கெட்டிலிருந்து பணத்தை பிடுங்கி குறிப்பிட்ட பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கு கின்றனர். இது போன்ற இந்தியாவை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற இந்தி யாவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட் டோம், என்றார். முன்னதாக இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் ஜெயகுமார், கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற பேரவைக்குழு தலைவர் செல்வபெருந்தகை, உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாநிலச் செய லாளர் கோஷி பேபி, நீலகிரி தொகுதி பொறுப் பாளர் நாகராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.