திருப்பூர், செப். 18 - மக்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் தெற்கு மாநகரம், பல்லடம் சாலை, தென்னம்பாளையம் சந்தைப் பேட்டை அருகே ஞாயிறன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநக ரக்குழு உறுப்பினர் பி.பாலன் தலைமை வகித்தார். கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், வாலிபர் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் நவீன் லட்சுமணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உரையாற்றினர். திருப்பூர் மிஷின் வீதி மார்க்சிஸ்ட் கட்சி கிளை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர் ஜி. செந்தில்குமார், கிளைச் செயலா ளர்கள் எல்.சுந்தர்ராஜன், செல்ல முத்து, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுகுமார் ஆகி யோர் மின் கட்டண உயர்வை வலியு றுத்திப் பேசினர்.