districts

img

உதகையில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி, ஜன.27- உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் வழக்கத்தை விட உறை பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.இத னால் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், பச்சை புல்வெளிகள் மீது பனிப்படர்ந்து வெள்ளை கம்பளம் போல் காட்சி அளித்தது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத் தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு  டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை தாக்கம் காணப்பட்டது. அதே போல் ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் மழை யின் தாக்கம் காணப்பட்டதால், உறைபனி யின் தாக்கம் தாமதமாக துவங்கியது. இந்நி லையில் கடந்த 10 நாட்களுக்கு முன் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறை பனி யின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. அதன் படி சனியன்று காலை உதகையில் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் அவ்வளாச்சே பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் குறைவான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. மேலும் உதகை நக ரில் பெய்த கடும் உறைபனிப் பொழிவு கார ணமாக சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டி ருந்த வாகனங்கள் மீதும், நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஒட்டி அமைந் துள்ள புல்வெளிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி காணப்பட்டது. குறிப்பாக, உதகை குதிரைப் பந்தய  மைதானம், காந்தல், தலைக்குந்தா, ஹெச்பிஎப், லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி யின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இத னால் அதிகாலையில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்வோர், கேரட், பீட்ரூட், முட்டை கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளின் அறு வடை பணிக்கு செல்வோர் என பலர் கடும் குளிரினால் அவதியடைந்தனர். மேலும், இந்த உறைபனி வரும் நாட்களில் ஜீரோ  டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ள தால், தேயிலை தோட்டங்கள் மற்றும்  மலைக்காய்கறியில் சாகுபடி பாதிப்படையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.