districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.1- விஆர்எல் லாஜிஸ்டிக் லாரி  நிர்வாகத்தைக் கண்டித்து அந்நி றுவனத்தின் ஈரோடு குடோன் முன்பு சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவ னம் இந்தியா முழுவதும் கிளை களை அமைத்து பொருள் போக்கு வரத்து செய்யும் நிறுவனமாகும். தமிழ்நாட்டிலும் பல்வேறு கிளை கள் இந்நிறுவனத்திற்கு உள்ளன. ஈரோட்டில் உள்ள கிளையில் வேலை செய்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களை கடந்தாண்டு நவம்பரில் தற்காலிக பணி நீக்கம்  செய்தது. இவர்கள் பணி நீக்க  காலத்தை ரத்து செய்ய வேண்டும்  என தொழிற்சங்கங்கள் சார்பில்  வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிர் வாகம் சுமைப்பணி தொழிலா ளர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. தற்காலிக  வேலை நீக்கம் மாதக்கணக்கில் நீடித்தது. இதனால் வேறு வழி யில்லாத சுமைப்பணியாளர்கள் பிழைப்பூதியம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற் காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பணி நீக்கத்தை  ரத்து செய்ய வேண்டும், தற்கா லிக பணி நீக்க காலத்திற்கு பிழைப் பூதியம் வழங்க வேண்டும். பணி நீக்கத்திற்கு முன்பு இருந்தபடி இத்தொழிலாளர்களை நிரந்தர மாக வேளையில் அமர்த்த வேண் டும் என உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தினர், அந்நிறுவனத்தின் ஈரோடு குடோன்  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் டி.தங்கவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், மத்திய சங்க  பொதுச்செயலாளர் கே.எஸ்.தென் னரசு, தலைவர் ஏ.விஜயகுமார், பாட்டாளி சங்கத் தலைவர் பிரபு, செய லாளர் கே.முனியப்பன், பொது  மத்திய சங்க தலைவர் ஏ.அய்யன் துரை, பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம், ஏடிபி துணைச்செயலாளர் மாது (எ) கே.மாதையன், மகாத்மா காந்தி சங்க கே.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு நிர்வாகிகள் எம்.அர்த்தநாரி, ஜி.செந்தில்குமுார், ஓ.முருகன், ஆர்.ரங்கநாதன் மற்றும் பெருந்தி ரளான சுமைப்பணி தொழிலாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.