districts

img

நலவாரிய செயல்பாட்டை மேம்படுத்திடுக சிஐடியு ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, செப்.12- முறைசார தொழிலாளர் நல வாரிய செயல்பாட்டை மேம்ப டுத்தி, பணப்பயன்கள் உரிய நேரத் தில் கிடைத்திட தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு ஈரோடு மாவட்ட மாநாடு தீர் மானத்தில் வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 11 ஆவது மாநாடு ஈரோடு பெரியார் மன் றத்தில், கே.வைத்தியநாதன், எம்.ராஜாங்கம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங் கினார். பி.ஸ்ரீதேவி அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். எம்.அர்த் தநாரி வரவேற்றார். சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராஜன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் வேலை அறிக்கையும், பொருளா ளர் கே.மாரப்பன் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர்

தீர்மானங்கள்

விவசாயிகளின் விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண் டும். மின்சார சட்டத்திருத்த மசோதா 2022ஐ திரும்பப்பெற வலியுறுத்தி மீண்டும் போராட்ட களம் கண்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித் தும், ஏழை எளிய மக்களையும், சிறு தொழில்களையும் பாதிக்கும் வகை யில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட் டண உயர்வை தமிழக அரசு திரும் பப் பெற வேண்டும். தமிழ்நாடு மின் சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு சார்ந்த துறை நிறுவனங்களில் அவுட் சோர் சிங் முறையில் பணியாற்றும் அனை வரையும் பணி நிரந்தரம் செய்ய  வேண்டும். பணியிடங்களில் விசாகா கமிட்டியின் அடிப்படையில் புகார் கமிட்டிகளை அமைத்திட வேண் டும். விசைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட முறைசாரா தொழில்களின் ஈடு பட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நலவாரிய செயல் பாட்டை மேம்படுத்தி அனைத்து பயன்களும் உடனடியாகக் கிடைத் திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநக ரில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதைத்தொடர்ந்து மாநாட்டில், சிஐடியு ஈரோடு மாவட்ட தலை வராக எஸ்.சுப்ரமணியன், செயலா ளராக எச்.ஸ்ரீராம், பொருளாளராக கே.கே.செந்தில்குமார் மற்றும்  6 துணைத்தலைவர்கள், 6 துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலர் நிறை வுரையாற்றினார். முடிவில் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.