districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பிடுக: சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

கோவை, ஜூன் 21- சத்துணவு மையங்களில் உள்ள  காலிப்பணியிடங்கள் அனைத்தை யும் நிரப்ப வேண்டும் என சத்துணவு  ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சத்துணவு மையங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி சத்து ணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், குடும்ப பாது காப்புடன் கூடிய ஓய்வூதியத்தை யும் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்திட வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி தமிழகம் முழுவதும், தமி ழக முதல்வரின் கவனத்தை ஈர்க் கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு  ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.என்.ராமசாமி தலைமையில்  நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஏ அம்சவேணி வர வேற்றார் இதில் மாவட்டச் செயலா ளர் எ.லதா, அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ். ஜெகநா தன், ஓய்வூதியர் சங்க மாவட்டச்  செயலாளர் எஸ்.மதன் உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், கோரிக்கைகளை விளக்கி, தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில முன்னாள் தலைவர் கே.பழனிசாமி, மாநிலச் செயலாளர் ஜெ.நிர்மலா ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் பங் கேற்றனர். முடிவில் மாவட்டப் பொரு ளாளர் ப.சுதா நன்றி கூறினார். தருமபுரி  இதேபோன்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட் டத் தலைவர் தேவகி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜே.அனுசுயா வரவேற்றார். மாநி லச் செயலாளர் பெ.மகேஸ்வரி மாவட்டப் பொருளாளர் ராமன், முன்னாள் மாவட்டத் தலைவர் சி. காவேரி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில்,  அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை, ஜாக்டோ - ஜியோ மாவட்டப் பொரு ளாளர் கே.புகழேந்தி, அரசு ஊழி யர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.முருகன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ச.விஜயமனோகரன் போராட் டத்தைத் தொடங்கி வைத்து உரை யாற்றினார். இதில் ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவமனை பணியாளர் சங்க மாநிலச் செயல ளார் எம்.சந்திரமௌலி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.விஜயன் நன்றி கூறி னார். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சத்துணவு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் என்.மணிச் செல்வம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாவட்டப் பொரு ளாளர் லதா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், பொருளாளர் செல்வம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க  மாநில துணைத்தலைவர் திருவே ரங்கன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.