districts

img

சொத்துக்களை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகள்

கோவை, டிச.28– சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக குற்றஞ்சாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திங்களன்று நான்கு மூதாட்டிகள் வந்து திடீரென உட லில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை யடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக மூதாட்டிகள் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்.

இதன்பின் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் அன்னூர் வட் டம், குப்பனூரை சேர்ந்தவர் ப.முருகாத்தாள் (97), மாராத்தாள் (75), லட்சுமி (70), பாப் பாத்தி (65) என்பது தெரியவந்தது. இவர் களுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை அவரது உறவினர்கள் ஆக்கிரமித்து விட்ட னர். ஆகவே, தங்களது நிலத்தை மீட்டுத் தரக்கோரி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.  இதனையடுத்து சம்பந்தப்பட்ட மூதாட் டிகளை காவல்துறையினர், அன்னூர் வட் டாட்சியரிடம் அழைத்து சென்றனர்.

அப் போது, இதுகுறித்து உடனடியாக விசா ரணை மேற்கொள்ளவதாக அவர் அளித்த உறுதியின் பேரில் மூதாட்டிகள் வீடு திரும்பினர். நான்கு மூதாட்டிகள் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.