கோவை, அக்.21- தீபாவளி பண்டிகையையொட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்ந் துள்ளது. கோவையிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் கட்டணமாக ரூ.13 ஆயிரம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவ தும் அக்.24 ஆம் தேதி கொண்டாப் படுகிறது. மக்கள் சிரமமின்றி தங்க ளின் சொந்த ஊர்களுக்கு செல்ல பல்வேறு சிறப்பு பேருந்துகள் ரயில் கள் இயக்கப்பட உள்ளன. மேலும், கோவையிலிருந்து சென்னை, பெங் களூரு, மும்பை உள்ளிட்ட நகரங் களுக்கு இயக்கப்படும் விமானங் களிலும் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவையில் இருந்து இரு மார்கத்தி லும் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் பல மடங்கு அதி கரித்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி உள் ளிட்ட பண்டிகை நாட்களில் அனைத்து விமானங்களிலும் பயணச்சீட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடை பெறுவது வழக்கம். விமான நிறு வனங்களும் தற்போது இயக்கப் படும் வழித்தடங்களில் கூடுதல் விமான சேவை தொடங்க நடவ டிக்கை மேற்கொள்ளும். தற்போது கோவையிலிருந்து நாள்தோறும் சென்னைக்கு 7, தில்லிக்கு 4, மும் பைக்கு 3, ஐதராபாத்துக்கு 3, பூனே விற்கு 2, பெங்களூருவிற்கு 2 விமா னங்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஷார்ஜா மற்றும் சிங்கப்பூ ருக்கு தலா ஒரு விமான சேவை வழங் கப்படுகிறது, என்றனர். இதுகுறித்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில், கோவை யிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படும் போதும் பண்டிகை நாட்களில் சென்னை, மும்பை மற்றும் தில்லி நகரங்களுக்கு இடையே இயக்கப் படும் விமானங்களுக்கான முன் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடை பெறும். இந்த ஆண்டு தீபாவளி பண் டிகையை முன்னிட்டு சென்னை - கோவை இடையே வழக்கமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் படும் பயணச்சீட்டு ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, அக்.22 ஆம் தேதியன்று பகலில் சென்னையிலிருந்து கோவைக்கு விமான கட்டணம் ரூ.13 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப் படுகிறது. அதேநாள் இரவு பயணத் திற்கு ரூ.12 ஆயிரத்து 800க்கு விற் பனை செய்யப்படுகிறது. மும்பை - கோவை இடையே இயக்கப்படும் விமானத்தில் வழக்க மாக ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டு தற் போது குறைந்தபட்சம் ரூ.10 ஆயி ரத்திற்கு மேல் விற்பனை செய்யப் படுகிறது. அதிகபட்சமாக ரூ.20 ஆயி ரம் வரை விற்பனை செய்யப்படு கிறது. கோவை - மும்பை இடையே இயக்கப்படும் ஒரு விமானத்தில் சாதாரண வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரீமியம் உள்ளிட்ட பல வசதிகளு டன் விமான பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. தில்லி - கோவை இடையே வழக்கமாக ரூ.7 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படும் பயணச்சீட்டு அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை - பெங்க ளூரு இடையே இரண்டு விமானங் கள் இயக்கப்படும் போதும் பயணச் சீட்டு முன்பதிவு வழக்கம் போலவே இருக்கும். விமானத்தை விட சாலை வழியாக பலர் பயணிப்பதே இதற்கு காரணம். தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மீண்டும் வழக்கம் போல் கட்ட ணம் வசூலிக்கப்படும், என்றனர்.