districts

img

சூளகிரி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 12- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மேலாண்மை குழுத் தலைவி சுதா துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷ், வெங்கடகுமார், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் வாழத்திப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சர்ஜான் , ஒருங்கி ணைப்பாளர் சம்சு கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் விமலா, சசிகலாவை கல்வி அலுவலர்கள் பாராட்டினர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், துளிர் திறனரிதல் தேர்வு எழுதிய 92 மாணவர்க ளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்மோகன் நன்றி கூறினார்.