districts

img

மின் ஊழியர் கருத்தரங்கம்

கடலூர், செப். 19- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 தேதிகளில் கடலூரில் நடைபெறுகிறது. மாநில மாநாட்டையொட்டி மாவட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.  அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் “மின்சார சட்டதிருத்த மசோதா - 2022, மின் ஊழியர்கள், மின் நுகர்வோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், துணைத் தலைவர் டி. ஆறுமுகம், பொருளாளர் டி.ஜீவா, இணைச் செயலாளர்கள் ஆர்.ஆறுமுகம், டி.ராஜகோபால், பி.தனுசு, டி. தனசேகரன், ஆர்.வடிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். எம்.சிவராஜ் நன்றி கூறினார்.