court

img

ஐபிசி ‘பிரிவு 124ஏ’ பற்றி தெளிவுபடுத்தும் நேரம் வந்து விட்டது....... அரசை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது... ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து...

 புதுதில்லி:
அரசை விமர்சிப்பதே தேசத் துரோக குற்றம் ஆகாது என்றும் தேசத்துரோகம் என்றால் என்ன? என்பது குறித்துத் தெளிவான வரையறையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தெரிவித்துள் ளார்.ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கண்ணுமூரி ரகுராம கிருஷ்ண ராஜூ, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விஷயத் தில் சொந்தக் கட்சிக்கு எதிராகவே விமர்சனங்களை முன்வைக்க ஆரம் பித்தார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், கண்ணுமூரி ரகுராம கிருஷ்ண ராஜூ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த ஆந்திரஅரசு, ராஜூவின் பேட்டிகளை ஒளிபரப்பியதற்காக ஆந்திராவைச் சேர்ந்த டிவி 5 மற்றும் ஏபிஎன் ஆந்திரஜோதி ஆகிய சேனல்கள் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு124-ஏ இன் கீழ் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது.ஆனால், ஆந்திர ஊடகங்கள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடின. ‘ஊடகங்களின் பேச்சு சுதந்தி
ரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால், ஆந்திர அரசு ஊடகங்களை மவுனமாக்க முயல்கிறது. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறது’ என்று முறையிட்டன.இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நாகேஷ்வர ராவ், ரவீந்திரபட் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில்திங்களன்று விசாரணைக்கு வந்தது. செய்திச் சேனல்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும்சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகினர். ‘ஆந்திர போலீசாரின் நடவடிக்கைமின்னணு ஊடகங்களை ஒழிக்கவும்பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கவும் எடுக்கப்படும் முயற்சியாக தெரிகிறது’ என்று அவர்கள் தங்களின் வாதத்தில் எடுத்துரைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய். சந்திர சூட், ‘ஐபிசி 124-ஏ மற்றும்153 ஆகிய சட்டப் பிரிவுகளின் விதிகளை நாம் தெளிவாக வரையறை செய்ய வேண்டிய காலம் வந்துவிட் டது என நீதிமன்றம் கருதுகிறது. குறிப்பாக, பத்திரிகைகளின் உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் பற்றி வரும்போது, இந்தப் பிரிவுகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். செய்தி சேனல்கள் கூறுவதை எல்லாம்தேச துரோகம் என்று நம்மால் வரையறை செய்ய முடியாது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘அரசை விமர சிப்பதே தேசத் துரோகம் ஆகாது’ என்றும் குறிப்பிட்டுள்ள சந்திரசூட் அமர்வு,இந்த விவகாரத்தில் மத்திய அரசும், ஆந்திர மாநில அரசும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக ஆட்சியில், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் எதிராக தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

;