court

img

குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குட்கா நிறுவனங்கள் பதிலளில்ல உச்சநீதிமன்றம் உத்தரவு
     சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்ட ரத்து உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிக்க மறுத்து தமிழ்நாடு அரசின் முறையீட்டு மனு மீது குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு உண்வ் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து பல குட்கா நிறுவனங்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர் .இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பர படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்ட ரத்து உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.
 

;