court

img

குர்ஆனில் 26 வசனங்களை நீக்கச் சொல்லும் மோடி ஆதரவாளர்.... தீவிரவாதத்தை பரப்புவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

புதுதில்லி:
இஸ்லாமியர்களின் புனித நூலானகுர்-ஆனில் 26 வசனங்களை நீக்கவேண்டும் என்று உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் வசீம் ரிஜ்வீ மூலம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 26 வசனங்களும் தீவிரவாதத்தைப் பரப்புவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.உ.பி. மாநிலத்தில் ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்தவர் வசீம்ரிஜ்வி. இவர் லக்னோ மற்றும் அலகாபாத்தில் வக்பு வாரிய நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் 2016, 2017-ஆம் ஆண்டுகளில் வழக்குகள் பதிவாகின. தற்போது அந்த வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே, பிரதமர் மோடியின்தீவிர ஆதரவாளராக மாறிய வசீம், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக மற்றும் இந்துத்துவாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.குறிப்பாக, அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவான  கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், சன்னி பிரிவு முஸ்லிம்கள் விவகாரங்களிலும் வரம்புமீறிப் பேசி பாஜகவுக்கு விசுவாசம் காட்டி வருகிறார்.‘‘தில்லியின் வரலாற்று சின்னமான ஹூமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும். நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்கிறது’’ என்று ரிஜ்வீபேசியது  பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையிதான், ‘‘முஸ்லிம் களின் புனித நூலான குர்-ஆனில் உள்ள 26 வசனங்களை நீக்க வேண்டும்’’ என கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வசனங்கள் தீவிரவாதத்தை வளர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது இஸ்லாமிய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷியா பிரிவின் மற்றொரு முக்கியத் தலைவரான மவுலானா கல்பே ஜாவேத் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், ‘‘தம்மை ஜிஹாதிகள் எனக் கூறிக் கொள்ளும் தலிபான் உள்ளிட்ட அமைப்பினர்தான் தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள். இவர் களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜிஹாத் என்பதுஉயிர்களை கொல்வது அல்ல. மாறாக, வாழ்க்கையை பாதுகாப்பது.ரிஜ்வி தம் மீதுள்ள சிபிஐ வழக்கை திசைத் திருப்பவே குர்ஆன் மீது வழக்கு தொடுத்து, நாட்டில் மதநல்லி
ணக்கத்தை குலைக்க முயல்கிறார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், “குர்ஆனின் 26  வசனங்களை அகற்றுவதற்கான போரில் தனது கடைசி மூச்சு வரை போராடுவேன்.  எனது மனைவி, குழந்தைகள், சகோதரர் மற்றும் உறவினர்களால் நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால்எனக்கு கவலையில்லை. கடைசி மூச்சுவரை இந்த போரில் போராடுவேன். நான் தற்கொலைகூட செய்து கொள்வேன், ஆனால் வழக்கை விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சவால் விட்டுள்ளார்.

;