court

img

10 முதல் 15 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை... பதவியில் இருப்போர் மீதான வழக்குகளை எப்போது முடிப்பீர்கள்? சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...

புதுதில்லி:
முன்னாள்- இந்நாள் எம்.பி.க்கள்மற்றும் எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) மற்றும்ஒன்றிய புலனாய்வுப் பிரிவின் (Central Bureau of Investigation)விசாரணை மெதுவாக இருப்பதாக,தலைமை நீதிபதி என்.வி. ரமணாதலைமையிலான உச்சநீதிமன்றஅமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் 10 முதல்15 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள் ளது.எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், சிறப்புநீதிமன்றங்களை அமைப்பதன் மூலம் அவற்றை விரைந்து விசாரித்துதீர்ப்பு வழங்க வேண்டும்; தண்டனைபெறும் எம்.பி., எம்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிசூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்டவாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவுவதற்காக (Amicus Curiae) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா, ‘’பதவியில் இருப்பவர்களின் மீதான வழக்குகள் தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐதாக்கல் செய்துள்ள நிலை அறிக் கைகளை கண்டால் அதிர்ச்சியாக உள்ளது. இதைச் சரிசெய்ய, அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்’’ என்று கூறினார்.அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, “அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ-யின் முடிக்கப் படாத 200 வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதை சொல்வதற்கு வருத்தமாகத் தான் உள்ளது. சில வழக்குகளில், 10 - 15 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று கூட விளக்கம் அளிக்கப்படவில்லை. 

அமலாக்க இயக்குநரகத்தின் 76 வழக்குகள், 2012 முதல் நிலுவையில் உள்ளன. சிபிஐ-யின் 58 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2000-ஆவது ஆண்டில் பதிவு செய்யப்பட்டவழக்குகள் கூட முடிவடையாமல் உள்ளன.51 எம்.பி.க்கள், 71 எம்எல்ஏ மற்றும் எம்எல்சி-க்கள் மீது பணமோசடி தடுப்புச் (The Prevention of MoneyLaundering Act- PMLA) சட்டத்தின் கீழ் வழக்குகள் உள்ளன. நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் 121 சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள்- இந்நாள் எம்.பி.க்கள் மீதான 51 வழக்குகளில் 28 வழக்குகள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணையில் உள்ளன. எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள் மீதான 121 சிபிஐ வழக்குகளில், 58 பேர் மீதான வழக்குகள், மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய அளவிற்கான தீவிரமான குற்றச்சாட்டுக்களைக் கொண்டது.

இவ்வாறு கூறுவதன்மூலம் நாங்கள் அமலாக்க இயக்குநரகம், சிபிஐ ஆகிய விசாரணை முகமைகளை மனச்சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. அவர்களும் நீதிபதிகளைப் போல அதிக சுமை கொண்டவர்கள். எனவே நாங்கள் நிதானத் தைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு எதிரான அறிக்கை மிகப் பெரியதாக உள்ளது” என்று தெரிவித்தது.‘’பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் சேமிப்புக்கள், வெளிநாடுகளில் இருப்பதால், விசாரணையில் காலதாமதம் ஏற்படுகிறது” என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடை உத்தரவுகளும் விசாரணை தாமதம் ஆவதற்கு காரணம் என்றஅவர், ‘’விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்குமாறு, விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார்.ஆனால், “பணமோசடி வழக்குகள் பலவற்றில், சொத்துக்களைக் கையகப்படுத்துவதைத் தவிர அமலாக்கத்துறை இயக்குநரகம் வேறுஎதையும் செய்வதில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் சொத்துக்களை மட்டும் கையகப் படுத்துவது வழக்கின் நோக்கத்திற்கு உதவாது” என்று கூறிய தலைமை நீதிபதி, 8 வழக்குகளில் (7 உயர்நீதிமன்றங்கள் மற்றும் 1 உச்சநீதிமன்றம்) மட்டும்தான் தடை உத்தரவு இருப்பதாகவும் புள்ளிவிவரத்தை அளித்தார். 

மேலும், “விசாரணையை விரைவுபடுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் சொல்வது எங்களுக்கு எளிதானது. ஆனால் நீதிபதிகள் எங்கே இருக்கிறார்கள்..? மனிதவளம் ஒரு உண்மையான பிரச்சனை.எங்களைப் போலவே புலனாய்வுநிறுவனங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் சிபிஐ விசாரணை கோருவது இன்றைய நடைமுறையாகி விட்டது. ஆனால், நீதித் துறையை போலவே, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ-யிலும் ஊழியர் கள் பற்றாக்குறை உள்ளது. சொலிசிட்டர் ஜெனரல்தான், இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்றுதெரிவித்தார்.

;