court

img

மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்க முடியாது - உச்சநீதிமன்றம்

புதுதில்லி,நவம்பர்.22- மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.
அரசியலமைப்பின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, இந்த வார்த்தைகள் அனைவருக்கும் சம வாய்ப்பு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது எனவும் அதுவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது எனவே அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.