court

img

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுதில்லி,செப்.26- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜிக்குக் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு அளித்தார் ஆனால் உயர்நீதிமன்ற சிறப்புக்குழு ஜாமின் வழங்க மறுத்தது. அதன்பின் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. 
இதில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை; திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் சாட்சிகளைக் கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது, ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது